ஓட்டப்பந்தயத்தில் சக ஓட்டக்காரனைப் பார்த்துக்கொண்டே ஒடுவது போலிருக்கிறது இந்த பெருமை.... வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டப் பந்தயம், ஆனால் அதில் பினிஷ் லைன் கிடையாது என்பது தான் உண்மை. நம் வாழ்வு அதற்குள் பினிஷ் ஆகிவிடுகிறது.
இந்த வெற்றிக்கோட்டை இதுவரை யாரும் இதுதான் என்று உறுதிப்படுத்தவில்லை. ஒவ்வொரு ஜெனரேஷனிலும் அந்த வெற்றிக்கோடு தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது. வெற்றிக்கோட்டை அடைவதற்காக ஓடி ஓடி கடைசி வரை வாழ்க்கையை ரசித்து யாரும் வாழ்வதே இல்லை. வாழ்நாளின் இறுதி சில வருடங்களில்தான் மனிதன் இந்த உண்மையை உணர்கிறான்.
ஆகவே உங்களுக்கு எது வேண்டுமோ அதை மன நிறைவுடன் ரசித்து வாழப் பழகிக் கொள்ளுங்கள். அடுத்தவருடன், சமுதாயத்துடன் உங்களை கம்பேர் பண்ண ஒருபோதும் முயற்சிக்காதீர்கள்.
ஏனென்றால், உங்களைப் போல் ஒருவர் இந்த உலகத்திலேயே இல்லை...